விஷ்ணு விஷாலுடன் இணைந்த உதயநிதி.. வைரலாகும் போஸ்டர்..

விஷ்ணு விஷாலுடன் இணைந்த உதயநிதி.. வைரலாகும் போஸ்டர்..

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி'

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.  இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

'கட்டா குஸ்தி' படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

'கட்டா குஸ்தி' திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.