Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

எதிர்பார்த்த வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடும் ட்விட்டர்!

ட்விட்டர் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ட்விட்டர் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் மக்கள் தினசரி எதாவது ஒரு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் டேரெக்ட் மெசேஜ் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது அந்நிறுவனம்.

மேலும் இதுதொடர்பான ட்வீட்டை ட்விட்டர் இந்தியா போஸ்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவுடன் பிரேசில், ஜப்பான் மாதிரியான நாடுகளிலும் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியை சோதனையிட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

ட்விட்டர் இந்தியாவில் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி கூறியது என்னவென்றால், இந்தியா ட்விட்டரின் முன்னணி சந்தைகளில் ஒன்றாகும். எனவே நாங்கள் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை சோதித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த புதிய வசதி எப்படி செயல்படும் என்பது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x