Today Rasi Palan : ​இன்றைய ராசிபலன் (31 மே 2023)

Today Rasi Palan for May 31, 2023 - ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Today Rasi Palan : ​இன்றைய ராசிபலன் (31 மே 2023)

சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.01 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி, இன்று அதிகாலை 04.32 மணி வரை அஸ்தம். பின்னர் சித்திரை. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்

தொழில் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே பிணக்கை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சிகளில் சாதகமான பலனை பெறுவீர்கள். அரசாங்க வேலையில் இடமாற்றம் பதவி உயர்வு அடைவீர்கள்.

ரிஷபம்

பெண்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்கு அடைவீர்கள். படிப்பில் தடைகள் நீங்கி மாணவர்கள் அக்கறை காட்டுவீர்கள். தொழில்துறையில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். நிலுவையில் உள்ள பணத்தை சாமர்த்தியமாக வசூல் செய்வீர்கள்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள். உடன் வேலை செய்பவரிடம் விவாதம் செய்யாதீர்கள். தொழில் மந்தமாக நடந்தாலும் வருமானத்தில் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வேலை இடத்தில் கவனத்தை கடைப்பிடிப்பீர்கள்.

கடகம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பீர்கள். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு இடையே நிலவி நிம்மதியை தொலைப்பீர்கள். எதிர்பார்த்தபடி வேலை நடக்காமல் மனம் சங்கட்டப்படுவீர்கள். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் பெறுவீர்கள். கலைத்துறையில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

சிம்மம்

அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பை பெறுவீர்கள். காதலியின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

கன்னி

பயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கலைத்துறையில் சீரான முன்னேற்றம் பெறுவீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள்.

துலாம்

பணவரவு அதிகமாகி மனக்கவலை நீங்குவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் லாபத்தில் குறை காண மாட்டீர்கள். புதிய வேலைகள் பற்றிய சிந்தனையை அதிகப்படுத்துவீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் சில நேரம் காரியங்களில் தடையை சந்திப்பீர்கள். பணியாளர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க முடிவு செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். தொழில்துறையில் மந்த நிலையை காண்பீர்கள். பெண்கள் விஷயத்தில் பண இழப்பை சந்திப்பீர்கள். சகோதரியின் அத்தியாவசிய கடனை அடைப்பீர்கள். அந்தஸ்தை காட்ட ஆடம்பர காரியங்களுக்காக வீண் செலவுகளை செய்வீர்கள்.

தனுசு

அரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழகி காரியம் சாதிப்பீர்கள். குடும்பச் செலவுகளை குறைப்பீர்கள். வேலையிடத்தில் மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் ஏற்றமான நிலையை காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அலைவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வருவீர்கள்.

மகரம்

புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டி தேர்ச்சி பெறுவீர்கள். அரசுப்பணியாளர்கள் அதிக கவனத்துடன் வேலை செய்வீர்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

கும்பம்

அவசரமாக முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப் போடுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். யாரையும் நேருக்குநேர் எதிர்த்துப் பேசாதீர்கள். அரசு அலுவலகங்களில் பணி அழுத்தம் அதிகரித்து நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அவதிப்படுவீர்கள். மனைவியின் கோபத்தை தவிர்க்க விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.

மீனம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி சந்தோஷப்படுவீர்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்வீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்த இழுபறிகள், இடைஞ்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மனைவியின் ஆறுதல் வார்த்தையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுரியமான பேச்சால் காரியத்தைச் சாதிப்பீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW