Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

துலாம்

சுப தினங்கள்:  6, 7, 8, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24.

அசுப தினங்கள்:  1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 25, 23, 26, 27, 28, 29, 30, 31.

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் இடைப் பகுதி வரை வேலை, குழந்தைகள், வாழ்க்கைத் துணை, உறவுமுறைகள் போன்றவற்றில் சிறந்த பலன்கள் கிட்டும். மார்ச் மாத இறுதிப் பகுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அவற்றை சமாளிப்பீர்கள். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல மனிதர்களின் நட்பு மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள், பணி செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் வந்து போகும். எனவே நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

இந்த மாதம் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மார்ச் மாத இடைப் பகுதியில் நீங்கள் உங்கள் காதல் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை காரணமாக உங்களுக்கு சில பொறுப்புகள் கூடும். குழந்தைகள் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் எழும். குழந்தைகளுடனான உறவு வலுப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் நம்பிக்கை தரும் வகையில் இருக்கும். ஆனால் இந்த மாத இறுதிப் பகுதியில் குறித்த நேரத்தில் பணம் கிடைக்காத காரணத்தால் சில பதட்டமான நிலை ஏற்படும். வியாபாரம் மூலமாக வருமானம் கிடைக்கும். வீடு மராமத்துப் பணி மற்றும் வீட்டிற்கு வெள்ளை அடித்தல் போன்ற வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் படிப்பிற்காக செலவுகளைச் செய்வீர்கள். நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக சேமிக்க வேண்டும்.

நீங்கள் சிறப்பாக பணியாற்றி சிறந்த நிலையை அடைவீர்கள்.பணி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் வளர்ச்சிப் பாதையில் சிறு சிறு தடைகள் வந்து போகும். உங்களின் சிறந்த பேச்சாற்றல் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

கூட்டுத் தொழில் மூலம் நீங்கள் ஒரு புதிய திருப்புமுனையைக் காண்பீர்கள். புதிய கூட்டாளிகளைக் கண்டு கொள்வீர்கள். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் புத்திசாலித் தனத்துடன் செயல்பட்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமை காரணமாக நீங்கள் அங்கீகாரமும் பெறுவீர்கள். அந்நிய மொழி மூலம் தொழிலில் ஆதாயம் பெறுவீர்கள்.

இந்த மாத இறுதியில் மேலதிகாரிகளுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் உற்சாகம் பெறுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. புதிய தொழிலை மேற்கொள்வதற்கு இது ஏற்ற மாதம்.நீங்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி செயலாற்றுதன் மூலம் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

இந்த மாதம் உங்கள் மனதில் துடிப்பும் உற்சாகமும் காணப்படும். அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கழுத்து வலி மற்றும்முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கவும் சுதந்திரமாக செயல்படவும் விரும்புவார்கள். பொறுப்புகளை தாமாக ஏற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்கள் சிறந்த பலன்களைக் காண முடியும்.. சக மாணவர்களுடன் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வார்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x