எப்போதும் சந்தேகப்படக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

உண்மையில் இப்படிப்பட்ட சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் இவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்துடனேயே பலர் இருக்கின்றனர்.

எப்போதும் சந்தேகப்படக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

நம் வாழ்வில் பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களை சந்தித்திருப்போம். சிலரைப் பார்த்தால் துரோகி என்றும், சிலரை அவநம்பிக்கை உடையவன், ஏமாற்றுக்காரன் என நம் மனதில் தோன்றும். 

உண்மையில் இப்படிப்பட்ட சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் இவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்துடனேயே பலர் இருக்கின்றனர்.

இதனால் எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், எந்த விஷயத்தையும் முழு கவனத்துடன் செய்ய அதில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பார்கள். 

அதற்கு அவர்களின் முன்னர் நடந்த சில கசப்பான சம்பவங்கள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் எப்போதும் சந்தேகத்துடனேயே இருப்பதால், ஒரு நம்பிக்கையுடைய உறவை வளர்ப்பது கடினமாகிவிடுகிறது.

இப்படி எப்போதும் சந்தேகத்துடன் இருக்கக்கூடிய 6 ராசியினர் யார் என்பதைப் பார்ப்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் பொதுவாக யாரையும் அவ்வளவு எளிதாக நம்புவதில்லை. இவர்கள் கடந்த காலத்தில் நேசித்த சிலர் ஏமாற்றி இருக்கலாம், அவர்களால் மனதில் காயப்பட்டிருக்கலாம். அதனால் எளிதாக யாரையும் நம்புவது கடினம்.

மிகவும் விசுவாசமான நபர்களாக இருக்கும் ரிஷப ராசியினர் ஒருமுறை அனுபவித்த நம்பிக்கை துரோகம் மறுமுறை அனுபவிக்க விரும்புவதில்லை. அதனால் இவர்களுடன் பழகுபவர்கள் இவர்களின் நம்பிக்கையை உடைக்காமல் பார்த்துக் கொள்ளவும். இவர்கள் மற்றவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டால் மீண்டும் அதை திரும்பப் பெறுவது கடினமாகிவிடும்.

கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, உணர்திறன், அக்கறை மற்றும் பச்சாதாபம் கொண்ட நபர்கள். இவர்கள் மற்றவர்களை நம்புவது கடினம். கடக ராசியினர் மேன்மேலும் காயப்படாமல் இருக்க தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். மற்றவர்களை நம்புவது கடினம். மனமுவந்து ஒருவரை நாம்புவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். ஒருவருடன் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தவுடன், அவர்கள் நிச்சயமாக தங்கள் முழு நம்பிக்கையையும் உங்களுக்குத் தருவார்கள்.

விருச்சிகம்

அதிகம் உணர்ச்சிவசப்படுதல், கோபப்படக்கூடிய ராசியினர் விருச்சிக ராசியினர். இவர்கள் மற்றவர்களுக்கு நம்பகமாக மற்றும் உண்மையுள்ள நபராக இருந்தாலும், மற்றவர்களை இவர்கள் நம்புவது கடினம்.

இவர்கள் அனைத்தை விஷயங்களை, அனைவரையும் சந்தேகப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரகசியமான, மர்மமான நபர்களாகவும், யாரையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் எண்ணி மனக்கவலை அடைய விரும்பாதவர்கள். நேர்மையாக இருக்கக்கூடிய இவர்களை யாரேனும் ஏமாற்றிவிட்டால் அது மனதிற்கு பெரிய vஅலியை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் யாரையும் எளிதில் நம்புவதில்லை. துரோகம் செய்வதாக உணர்ந்தால் அவர்களிடம் காலத்திற்கும் பேசமாட்டார்கள்.

மகரம்

மிகவும் அப்பாவியாக இருக்கக்கூடிய மகர ராசியினர் பலரை நம்பி காயமடையக்கூடியவர்கள். மகர ராசிக்காரர்கள் நேர்மையான, நம்பகமான, கடின உழைப்பாளியாக இருந்தாலும், மற்றவர்களிடம் நம்பிக்கையை வளர்க்கக் கூடியவராக இருந்தாலும், யாரேனும் ஒருவர் பொய் சொல்லும்போதோ அல்லது எதிராக செயல்படுவதை உணர மாட்டார்கள். குறிப்பாக காதல் விஷயங்களில் யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.

கும்பம்

கும்ப ராசியினர் தொழில், வேலை ரீதியாக மட்டுமல்லாமல், டேட்டிங், காதல் போன்ற உறவிலும் அதிக நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள். காரணம் இவர்கள் எந்த ஒரு விஷயத்திற்காகவும் கவலை அடைய விரும்புவதில்லை.

சுதந்திரமாக இருக்க நினைக்கும் இவர்கள், மற்றவர்களை நம்பி ஏமாற விரும்பமாட்டார்கள். யாரையும் எளிதில் நம்புவதில்லை.

மீனம்

மீன ராசியினர் அதிக உணர்திறன், பச்சாதாபம், இரக்கக் குணம் கொண்டவர்கள். மற்றவர்கள் ஏமாற்றுவதையோ, எதிர்பார்த்து ஏமாறுவதோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மற்றவர்களை நம்பி ஏமார்ந்து அவநம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக, முழுவதும் நம்பாமல் சற்று விலகியே இருப்பார்கள். துரோகத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW