4 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்
பெப்ரவரி 16ஆம் திகதி களத்திர காரகன் சுக்கிரன், மீன ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறவுள்ளார்.

2023 பெப்ரவரி 15ஆம் திகதி பித்ருகாரகன் சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
பெப்ரவரி 16ஆம் திகதி களத்திர காரகன் சுக்கிரன், மீன ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறவுள்ளார்.
ஏற்கனவே அங்கு தனக்காரகன் குரு பகவான் மீனத்தில் ஆட்சி பெற்று சஞ்சரித்து வருகின்றார். இதனால் நான்கு ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்கு குரு,சூரியன், சுக்கிரன் சேர்க்கை நடக்க உள்ளது. இதன் காரணமாக திடீர் பண வரவு, தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கன்னி - கன்னி ராசிக்கு குரு, களத்திர காரகன் சுக்கிரன் சேர்க்கை நடப்பதால் நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு - தனுசு ராசிக்கு சுக்கிரன் குருவுடன் இணைந்திருப்பது பல விதத்தில் நல்ல பலனைத் தரும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு காதல் திருமணமாக கைகூட வாய்ப்புள்ளது.
மகரம் - மகர ராசிக்கு ஏழரை சனி நடந்தாலும், இந்த ராஜ யோகம் தரும் காலம் மிகவும் நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் வருமானம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |