கோண்டாவில் பகுதியில் திருட்டு : பொலிஸாரின் அதிரடி

கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கட்டட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

கோண்டாவில் பகுதியில் திருட்டு : பொலிஸாரின் அதிரடி

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டட பொருட்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கட்டட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.