Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

அலரி மாளிகை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் நிராகரித்தது

எதிர்வரும் 4ம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில், பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று ஜனாதிபதி கூறிய நிலையில், பழைய நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பைக் கோரும் பிரதமரின் இந்த அறிவிப்பில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டின் நெருக்கடி குறித்து ஜனாதிபதி விவாதிக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, குறித்த அழைப்பினை மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் நிராகரிப்பதாக அறிவித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x