உயர்ந்த மற்றும் சிறந்த வெகுமதிகளுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது.

உயர்ந்த மற்றும் சிறந்த வெகுமதிகளுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் காப்புறுதித் துறையில் சர்வாம்சங்களும் பொருந்திய பாங்கசூரன்ஸ் வெகுமதித் திட்டமாக அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence, உயர்ந்த மற்றும் சிறந்த வெகுமதிகளுடன் மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றும் காப்புறுதி உறவு பேண் அதிகாரிகள் (IROs), பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இந்த மீள அறிமுகம் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் காணப்படும் மாபெரும் பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் வகையில், எமது மாபெரும் சொத்தாக எமது ஊழியர்கள் அமைந்துள்ளனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
எமது உயர்ந்த வெகுமதிகள் மற்றும் கௌரவிப்பு திட்டத்தை தொடர்ந்தும் சர்வதேச நியமங்களுக்கமைய முன்னெடுக்கும் வகையில் The Circle of Excellence மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எமது பெறுமதி வாய்ந்த ஊழியர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் சிறந்த வெகுமதிகளைப் பெற்றுக் கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence இனால் பரந்தளவு நிதியியல், வாழ்க்கை முறை, கௌரவிப்பு, திறன் விருத்தி மற்றும் அங்கத்துவ வெகுமதிகள் போன்றன வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் பரந்தளவு அனுகூலங்களில் சொகுசு வாகனங்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், பெருமளவான பணக் கொடுப்பனவு வெகுமதிகள், பிரத்தியேகமான பயிற்சி மற்றும் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களினூடாக தொழில் நிலை முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய Circle of Excellence வாணிபப் பொருட்கள் போன்றன அடங்கியுள்ளன.
 
சிறப்பாக செயலாற்றுவோருக்கு வெகுமதியளிப்பதுடன், இந்த நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் ஆர்வத்துடன் செயலாற்றும் செயலணியினரை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களின் தேவை மதிப்பாய்வுகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பது மற்றும் கொள்முதலை மேம்படுத்தும் வகையிலான சேவை விநியோகம் மற்றும் வாடிக்கையாளர்களின் பாவனையாளர் அனுபவத்தை சிறப்படையச் செய்வது போன்றவற்றை கௌரவிக்கக்கூடியதாக இருக்கும்.

மேலும், 2021 ஆம் ஆண்டில் காப்புறுதி உறவு பேண் அதிகாரிகளுக்கு சாதனை மிகுந்த செயற்திறனை பதிவு செய்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence வெகுமதியளிக்கும் திட்டமாக அமைந்திருந்தது. அதனூடாக நிறுவனத்துக்கு 300 MDRT தகைமையாளர்களை பதிவு செய்து, தொழிற்துறையில் முன்னோடி எனும் நிலையை எய்தக்கூடியதாக இருந்தது.
 
பல கௌரவிப்புகளை தன்வசம் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பாங்கசூரன்ஸ் பிரிவு, கடந்த காலங்களில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், நாட்டில் காணப்படும் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் நிலையை எய்தியுள்ளது. நாட்டின் முன்னணி வங்கிப் பங்காளர்களின் 360 க்கும் அதிகமான வங்கிக் கிளைகளை உள்வாங்கி செயலாற்றுகின்றது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 47.5 பில்லியனையும், 2021 செப்டெம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 250% ஐக் கொண்டிருந்தது.

இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.