மாணவியுடன்  சென்ற நாய்க்கும் டிப்ளோமா... வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளோமா பட்டம் வழங்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும், கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.

இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது.

பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டி உற்சாகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW