படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்!

0

சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் மீ டூ புகார் தெரிவித்து வந்தனர்.

இது கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில் நாட்களுக்கு முன் நடிகை காஷ்மிரா ஷாவும், மீ டூ அனுபவங்களை தெரிவித்திருந்தார்.

இவர் தமிழில் திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்த, அகம் புறம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர்.

இந்த நிலையில், வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாதுறையில் மட்டுமல்ல என்று நடிகை நந்தினி ராயும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் இருக்கிறது. இருந்தாலும் பெண்ணின் பதிலை பொருத்தே அது நடக்கிறது.

எந்த பெண்ணும் நோ என்று மறுத்துவிட்டால், யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் அதுபோன்ற எந்த அநாகரிகமான பிரச்னைகளை ஒரு போதும் எதிர்கொண்டதில்லை.

கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், ஏன் எல்லோரும் இந்தப் பிரச்னை தொடர்பாக சினிமா துறையை மட்டும் கை காட்டுகிறார்கள் என்று என்பது எனக்குப் புரியவில்லை.

இது மருத்துவம், தொழில்நுட்பத்துறை, காவல்துறை போன்ற பல துறைகளில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இவர் தமிழில் கிரகணம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x