கட்டாயமாக முகக்கவசம் - வழிகாட்டலை நீக்கிய ஹொங்கொங் 

உலகில் நீண்டகாலமாக கொவிட் - 19 தொற்றுப்பரவல் தொடர்பான பாதுகாப்பு வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்திவந்த ஹொங்கொங், கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டுமென்ற வழிகாட்டலை நீக்கியுள்ளது.

ஹொங்கொங்கில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், புதிதாகத் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை எனவும் அந்நகர முதல்வர் ஜோன் லீ தெரிவித்துள்ளார்.

கொரியாவில் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டுமென்ற வழிகாட்டல் கடந்த 2020 ஜுன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அவ்வழிகாட்டல் 945 நாட்களாக நீடித்துள்ளது. அதனைமீறி முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து 5000 ஹொங்கொங் டொலர் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்ற வழிகாட்டல் நீக்கப்பட்டிருப்பதன் ஊடாக, ஹொங்கொங் மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமென நகர முதல்வர் ஜோன் லீ நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.