Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

அறுவை சிகிச்சை செய்துகொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற மருத்துவர்

அமெரிக்காவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போதே, இணையம் வழியே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ளார் ஒரு மருத்துவர்!

கடந்த வியாழக்கிழமை (25), போக்குவரத்து நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

கலிஃபோர்னியா (California) மாநிலத்தின் செக்ரமேண்டோ (Sacramento) நகரைச் சேர்ந்தத் ஸ்கோட் கிரீன் (Scott Green), அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உடைகளை அணிந்திருந்தார்.

அவர் அறுவை சிகிச்சைக் கூடத்தில் இருப்பது போலவும் தென்பட்டது. அதை கவனித்த நீதிமன்ற எழுத்தர், கிரீனிடம் விசாரித்தார்.

“ஆம், நான் அறுவை சிகிச்சைக் கூடத்தில்தான் இருக்கிறேன். பரவாவில்லை, விசாரணையில் பங்கேற்கலாம்.” என்று கிரீன் பதிலளித்தார்.

இணையம் வழியே நடத்தப்படும் விசாரணையில் நீதிபதி வருவதற்குக் காத்திருக்கும்போது, அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக BBC குறிப்பிட்டது.

கிரீன் இருந்த சூழலைக் குறித்து பின்னர் நீதிபதியும் கேள்வி எழுப்பியபோது, தாம் விசாரணையில் பங்கேற்கலாம் என்றும் அறுவை சிகிச்சையை மற்ற மருத்துவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இருப்பினும், அது சரியான நடவடிக்கை இல்லை என்றும், அவர் விசாரணையை ஒத்திவைக்கவுள்ளதாகவும் நீதிபதி சொன்னார்.

அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகக் கலிஃபோர்னியா மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x