யாழில் வாழைத்தோட்டத்துக்குள் இளைஞனின் சடலம்!

உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள்ளிருந்து நேற்று (12) இரவு சடலம் மீட்கப்பட்டது.

யாழில் வாழைத்தோட்டத்துக்குள் இளைஞனின் சடலம்!

யாழ். உரும்பிராயில் வாழைத்தோட்டத்திற்குள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள்ளிருந்து நேற்று (12) இரவு சடலம் மீட்கப்பட்டது.

வாழைத்தோட்டத்திற்குள் ஒருவர் நினைவிழந்திருப்பதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் சென்றனர்.

எனினும், அங்கிருந்த நபர் உயிரிழந்து காணப்பட்டார். இணுவில் வடக்கை சேர்ந்த 36 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அவருடன் தங்கியிருந்த 4 இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்,  அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW