இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ: புகாரளித்த ஹீரோவின் மனைவி!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் சகோதரரான இவர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ: புகாரளித்த ஹீரோவின் மனைவி!

பிரபல தமிழ் ஹீரோயின் மனைவிக்கு மர்ம நபர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்த நிலையில் இது குறித்து அந்த நடிகரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் சகோதரரான இவர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய பள்ளிக்கால தோழி சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நகுல் மற்றும் சுருதி ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்கள் என்பதும் பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகுலின் மனைவி சுருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாக தெரிகிறது. 

இதனை சுருதி பலமுறை கண்டித்தும் தொடர்ச்சியாக ஆபாச படங்கள் வந்து கொண்டிருந்ததை அடுத்து சுருதி போலீசில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.

பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கம் குறித்து எப்போதும் தவறான கருத்துக்களையே பதிவு செய்கிறார்கள் என தனது ஆதங்கத்தையும் இன்ஸ்டாகிராமில் சுருதி வெளிப்படுத்தி உள்ளார்.