இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2023 : Indraya Rasi Palan, March 07

இன்றைய ராசிபலன் – 07 மார்ச் 2023 (Today Rasi Palan) - மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2023 : Indraya Rasi Palan, March 07

மேஷம்

ஏதோ ஒரு மன கவலையால் இரவில் தூங்காமல் தவிப்பீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் கை பொருளை இழப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வீண் தொல்லைகளில் மாட்டிக் கொள்வீர்கள். மனைவி மக்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் சேமிப்பால் உங்கள் முக்கிய கடனை அடைப்பீர்கள்.

ரிஷபம்

தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். காதலியின் தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். மனை, நிலங்கள் வாங்கி விற்கும் வாய்ப்பு வந்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

மிதுனம்

உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பணத்தை தடையில்லாமல் பெறுவீர்கள். கோபித்துக் கொண்டு தாய் வீடு போன மனைவியை சமாதானம் செய்து கூட்டி வருவீர்கள். வியாபாரத்திற்கான வெளியூர்ப் பயணத்தில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்

எடுத்த காரியங்களில் இடையூறைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஆசைப்படாதீர்கள். சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள். அதனால் பண விரையம் ஏற்பட்டு கடன் வாங்க கஷ்டப்படுவீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்யாதீர்கள்.

சிம்மம்

வெளியிடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அடுத்தவர் விஷயங்களில் பஞ்சாயத்து பண்ணாதீர்கள். கண்காது பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். காதலியின் கருத்துக்கு இணங்கி நடப்பீர்கள். செல்போனில் அதிக நேரம் கண்விழித்து கேம் விளையாட கூடாது என்று பிள்ளைகளை கண்டிப்பீர்கள்.

கன்னி

உங்களுக்கு வயது குறைந்தவரிடம் எச்சரிக்கையாகப் பேச மறக்காதீர்கள். தராதரம் இல்லாமல் தலை குனிய வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். பணத்தட்டுப்பாடு காரணமாக அடுத்தவரிடம் கையேந்தும் கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள். நண்பர்களின் மனதைப் புரிந்து நடந்து கொள்வீர்கள். ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் அபாரமான லாபத்தைக் காண்பீர்கள். கட்டுமானத் தொழிலில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்கள் லாட்டரிகள் உங்களுக்குச் சாதகமாக அமைவதால் சந்தோஷத்தில் திளைப்பீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களில் மட்டும் ஈடுபடாதீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவீர்கள்.

விருச்சிகம்

வசீகரமான வார்த்தைகளால் வாடிக்கையாளர்களை ஈர்த்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாகத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். எதிர்காலம் கருதி வங்கியில் பணத்தைச் சேமிப்பீர்கள். உங்கள் மீது அக்கறை கொண்ட பெரியோர்களின் ஆதரவால் நல்ல காரியங்கள் நடத்துவீர்கள். பழைய கடனை வசூல் செய்வீர்கள்.

தனுசு

தொழிலுக்குப் போட்டியாக புதிய விரோதிகள் தோன்றி தொல்லை கொடுப்பார்கள். அவர்களைச் சமாளிக்க அதிகம் செலவு செய்வீர்கள். கடுமையாக வேலை செய்தாலும் மேலதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத பகையை இழுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.

மகரம்

தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா... இன்றைக்கு வேண்டாம். அதை ஒத்தி வையுங்கள். அடுத்தவர்களுக்காக உங்கள் பணத்தைச் செலவு செய்து அவதிப்படாதீர்கள். விதண்டாவாதம் பேசி உறவினரிடம் கெட்டபெயர் எடுக்காதீர்கள். வெளிக் கோபங்களை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

கும்பம்

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்து பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பிரயாணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நல்ல முடிவு கிடைத்து மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.

மீனம்

புதிய நண்பர்கள் பழக்கத்தை அதிகரிப்பீர்கள். அவர்களால் வியாபாரத்திற்குத் தேவையான உதவிகள் பெறுவீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றத்தை அடைவீர்கள். . வீட்டில் சின்னச் சின்னச் சங்கடங்கள் தோன்றினாலும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.