Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

நம்பிக்கையில்லா பிரேரணை

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியினர் உள்ளிட்ட 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (29.11.2018)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மற்றுமொரு பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டினை நிறுத்துவதற்காக இந்த பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போது,...

‘நம்பிக்கையில்லா பிரேரணை எனக்கு வைக்கப்பட்ட பொறி’

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தான் நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை...

நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்தார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது தடவையாகவும், நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை உரிய நாடாளுமன்ற நடைமுறைகளின் படி நிறைவேற்றப்படவில்லை என்று...

எதிர்க்கட்சித் தலைவரை குறிவைக்கும் ஒன்றிணைந்த எதிரணி

மே மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட...

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு எதிராக கொண்டுவரப்படுவதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மோதரை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக்...

பிரதமர் பதவியை மறுத்துவிட்டேன் என்கிறார் ராஜித

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்...

பிரேரணையால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி...

ஒன்றிணைந்த எதிரணிக்குள் கருத்து முரண்பாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக ஒன்றிணைந்த எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, பிரதமருக்கு...

மஹிந்தவும் நாமலும் ஆதரவாக வாக்களிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்தன. 26 வாக்குகள் அளிக்கப்படவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...

பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து வாக்களிக்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன. மனோ கணேசன்...

மனசாட்சிப்படி வாக்களியுங்கள்: சு.க உறுப்பினர்களிடம் கோரிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர். இந்த முடிவைத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறவுள்ளதாக, நேற்று...

Must Read