டி20 உலகக்கிண்ணம் : நாணய சுழற்சியில் வென்று நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்

ICC T20 World Cup: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது டி20 உலகக்கிண்ணம் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

டி20 உலகக்கிண்ணம் : நாணய சுழற்சியில் வென்று நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது டி20 உலகக்கிண்ணம் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதிச்சுற்றில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று (09) பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளது. 

பாகிஸ்தான் அணி விவரம்

முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷாஹீன் அஃப்ரிடி.

நியூசிலாந்து அணி விவரம்

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.