டி20 உலகக்கிண்ணம்: முதல் வெற்றியைப் ருசித்தது பாகிஸ்தான்!

ICC T20 World Cup:டி 20: உலக கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்குதல் கொடுத்தனர். 

இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. 

பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

டி20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷை 150 ரன்களில் சுருட்டியது சிம்பாப்வே!

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம்போல கேப்டன் பாபர் ஆசாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின்னர், பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில்  இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

நெதர்லாந்து தரப்பில் பிராண்டன் கிளோவர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.