டி20 உலகக்கிண்ணம்: நாணய சுழற்சியில் வென்றுள்ள இங்கிலாந்து பந்துவீச்சு!

ICC T20 World Cup: இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக்கிண்ணம்:  நாணய சுழற்சியில் வென்றுள்ள இங்கிலாந்து பந்துவீச்சு!

டி20 உலகக்கிண்ணம் 2022 தொடரின் அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

இன்று அடிலெய்டில் நடைபெறம் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும். 

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

டி20 உலகக்கிண்ணம் : நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

இந்திய அணி விவரம்: 

கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து அணி விவரம்: 

ஜோஸ் பட்லர்(கே), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்.