சபை முதல்வராக சுசில் : பிரதம கொறடாவாக பிரசன்ன

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

சபை முதல்வராக சுசில் : பிரதம கொறடாவாக பிரசன்ன

சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியது.

முன்னதாக சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமராக பதவியேற்றுள்ளதால் ஏற்பட்ட சபை முதல்வர் பதவி வெற்றிடத்திற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

இதன்போது, வஜிர அபேவர்த்தன பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்பில் பிற்பகல் 4.30 வரை விவாதிக்கப்பட்டவுள்ளது.