Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

1 வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பொருள்; எச்சரிக்கும் மருத்துவர்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தையின் உணவுக்குழாயில் திறந்த நிலையில் சிக்கிய ‘பின்னூசி’யை பாதுகாப்பாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

பிரகாஷ், திருப்பூர் மாவட்டம் தெக்கலுார் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு நித்தீஷ் என்று ஒரு வயதுக் குழந்தை. இந்த குழந்தைக்கு திடீரென மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு, அழுதுகொண்டே இருந்துள்ளான்.

உடனே குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.

அலி சுல்தான் தலைமையிலான மருத்துவர்கள், எக்ஸ்-ரே மற்றும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அப்போது மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தையின் உணவுக்குழாயில், பின்னுாசி திறந்த நிலையில் குத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக, மயக்கவியல் துறை மருத்துவர் மணிமொழிசெல்வன் மற்றும் மருத்துவர் வி.அருள்செல்வன் தலைமையில் பின்னுாசியை அறுவை சிகிச்சை இல்லாமல் ‘எண்டோஸ்கோபி’ மூலம் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். தற்போது சிகிச்சை முடிந்த குழந்தை நலமுடன் வீடு திரும்பியுள்ளது.

மருத்துவர் அருள்செல்வன் இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது ”குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக்கொள்ளும் சுபாவம் இயல்பாகவே உள்ளது.

அவ்வாறு பொம்மைகளில் உள்ள பட்டன், பேட்டரி, குண்டூசி, சட்டை பட்டன்கள், ஊக்குகள், நாணயங்கள் போன்றவற்றை வாயில் வைக்கும்போது, ‘வழுவழு’வென இருக்கும் என்பதால் அவை எளிதாக உணவுக்குழாய், மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும்.

அதனால் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் நிலக்கடலை, பட்டாணி, மக்காச்சோளம் போன்ற உணவு பொருட்களை வாயில் போட விட கூடாது.

திடீரென மூச்சுத் திணறல், சாப்பிடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x