Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இலங்கை – பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இரண்டு பிரதமர்களுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் ஆரம்பமானது.

வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தும் ஷா மஹ்மூத் குரேஸி உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு நாடுகளின் பிரதமர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் இராணுவ மரியாதைகளுடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான் பரப்பில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் நாளை (24) ஜனாதிபதியை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x