கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவு பெரும் வரை அதனை அண்மித்த பாதைகள் மூடப்படவுள்ளன.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவு பெரும் வரை அதனை அண்மித்த பாதைகள் மூடப்படவுள்ளன.
அதன்படி, சுதந்திர சதுக்க வீதி , சுதந்திர சதுக்க சுற்றுவட்டதிற்கு உள்நுழையும் பாதை, இலங்கை மன்ற வீதி மற்றும் ஸ்டான்லி விஜேசுந்தர வீதியினால் இலங்கை மன்ற வீதிக்குள் உள்நுழையும் பாதை, ப்ரேமகீர்த்தி அல்விஸ் வீதி மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திலிருந்து சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திற்கு உள்நுழையும் பாதை போன்ற பாதைகள் மூடப்படவுள்ளன.
மேலும் , குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் காரியாலயங்களுக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளன.
சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவு பெரும் வரையில் போக்குவரத்திற்காக குறித்த வீதிகள் திறக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.