Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

என்னோடதை பறிச்சு… குரங்குகளிடம் சிக்கிய சிரேயா ரெட்டி…

டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை சிரேயா ரெட்டி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் ஒரு படம் நடித்துள்ளார்.

2002 ம் ஆண்டு விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். பிறகு திமிரு, வெயில், காஞ்சிவரம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2008 ம் ஆண்டு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இருப்பினும் தனது கணவருடன் சேர்ந்து சில படங்களை தயாரித்து வந்தார். 2018 ம் ஆண்டு சில சமயங்களில் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அண்டாவக் காணோம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தனது அன்றாட நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாகக் கொண்ட இவர், சமீபத்தில் கொடைக்கானல் சென்றார். அப்போது இவர் தங்கியிருந்த இடத்தில் குரங்குகள் சில புகுந்து செய்த அட்டகாசத்தை 2 வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

அதில் ஒரு வீடியோவுடன், பால்கனியில் வித்தியாசமாக சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். அங்கு புகுந்த சில குரங்குகள் நான் வைத்திருந்த நட்ஸ்களை சிதறடித்து, கொறித்துக் கொண்டிருந்தன. அவர்களும் அன்று புரோட்டின் உணவுகளை எடுத்துக் கொண்டனர் என கருத்து பதிவிட்டிருந்தார்.

மற்றொரு வீடியோவில், ஜன்னல் வழியாக ஸ்ரேயாவின் அறைக்குள் புகுந்த குரங்குகள் அவரது பையில் வைத்திருந்த நட்ஸ்களை எடுத்து சாப்பிட்டுள்ளன. அதில், அவர்களுக்கு புரோன் ரொம்ப பிடித்துள்ளது போல என கூறி இருந்தார்.
குரங்குகள் செய்த அட்டகாசத்தை வித்தியாசமாக பதிவிட்டுள்ள சிரேயாவின் பதிவை பலரும் ரசித்துள்ளனர்.

ஃபிட்னஸில் அதிக அக்கறை கொண்ட சிரேயா ரெட்டி, அவ்வப்போது தான் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x