Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஏழரை சனி என்றால் என்ன? அதன் தாக்கத்தைக் குறைக்க என்னலாம் செய்யலாம் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் இடம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இத்தகைய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனிப் பெயர்ச்சியானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி நடக்க உள்ளது. அதே சமயம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2020 டிசம்பர் 27 ஆம் திகதி நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் ஏழரை சனி யாருக்கு என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். பொதுவாக சனிபகவான் ஒரு ராசியின் இருக்கிறார் என்றால், அந்த ராசியுடன், அதன் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கும் ஏழரை சனி என்று பெயர்.

தற்போது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் செல்லவிருக்கிறார். இதனால் மகர ராசிக்கு ஜென்ம சனியும், தனுசு ராசிக்கு பாத சனியும், கும்ப ராசிக்கு விரய சனியும் தொடங்குகிறது. மேலும் கும்ப ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது.

பொதுவாக ஏழரை சனி என்றாலே பலரும் அஞ்சுவோம். ஆனால் சனி பகவான் ஒரு பாசக்காரர். அதே சமயம் நீதி நாயகனும் கூட. எனவே நீங்கள் நீதி தவறாமல் நடப்பவராயின், சனியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.

அனுமன் சாலிசா

சனி பகவான் அனுமனின் பக்தர் மட்டுமின்றி, நண்பரும் கூட. சனி பகவான் அனுமனின் பக்தர்களுக்கு மோசமான விளைவுகளைத் தரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். எனவே ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதால், பெரிதும் பயனடையக்கூடும்.

சனி மந்திரம்

சனி பகவானின் அருளைப் பெற தினமும் மாலை வேளையில் சனி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். சனி சாலிசாவை தினமும் பாராயணம் செய்வதன் மூலமும், ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

“ஓம் ஷாம் சனிச்சாரய நம”

நவகிரக பூஜை

ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நவகிரக பூஜை நடத்த வேண்டும். நவகிரக பூஜையானது கடவுள்களை சாந்தப்படுத்துவதோடு, ஜாதகத்தில் உள்ள மோசமான கிரக நிலைகளால் சந்திக்கும் எதிர்மறை விளைவுகளைத் தடுத்து, வாழ்வில் நேர்மறை மற்றும் நம்பிக்கையை வழங்கும். மேலும் ஏழரை சனி நடக்கும் நபர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று, நவகிரகங்களை வணங்கி, செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு கேட்டு பிராத்தனை செய்தால், சனிபகவான் மகிழ்ச்சியை வழங்குவார்.

எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம்

ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று சனி பகவானுன்னு எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம் போட்டு வந்தால், சனி பகவான் சந்தோஷமடைவார். புராணத்தின் படி, கடுகு எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அனுமன் சனி பகவானின் காயங்கள் மற்றும் வடுக்களைக் குணப்படுத்த கடுகு எண்ணெயை வழங்கினாராம்.

காகத்திற்கு சாதம்

ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் சாப்பிடும் முன் வெள்ளை சாதத்தில் கருப்பு எள்ளைப் போட்டு பிசைந்து, அதை காகத்திற்கு வைத்து வந்தால், முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், சனியின் அருளும் கிட்டும்.

இரும்பு அல்லது எண்ணெயை வாங்காதீர்கள்

ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று இரும்புப் பொருட்களை வாங்கவோ அல்லது எண்ணெய்களான கடுகு அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

7 மற்றும் 14 முக ருத்ராட்சம்

சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தர். எனவே சிவபெருமானை பிரார்த்தனை செய்து, மகா மிருத்யுஞ்சாய மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. அந்த மந்திரம் பின்வருமாறு.

“ஓம் த்ரியம்பகம் யஜமஹே சுகந்திம் புஷ்டிவர்தணம், ஊர்வருகாமிவா பந்தநாத் மிருத்யோர் மூஷியாமாமிருத்”

ஏழரை சனி தாக்கத்தை 7 மற்றும் 14 முக ருத்ராட்சையை அணிவதன் மூலம் குறைக்கலாம். 7 முக ருத்ராட்சை ஒருவரது நிதி மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதோடு, ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைத்து, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை வழங்குகிறது. 14 முக ருத்ராட்சை சிவபெருமானின் உண்மையான வடிவம் என்று கூறப்படுவதால், சனி பகவானைப் பிரியப்படுத்த இந்த வடிவ ருத்ராட்சையை அணிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ/குபேர யந்திரம்

லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ யந்திரம் அல்லது குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குபேர யந்திரத்தை வீட்டின் வடக்கு திசையில் வைப்பதன் மூலம், செல்வத்தின் பாதுகாவலரான குபேரர் செல்வத்தை அதிகரிக்க உதவுவதோடு, வாழ்வில் வெற்றி அடைய உதவுவார். மேலும் இது ஏழரை சனியின் மோசமான விளைவுகளையும் குறைக்க உதவும்.

நல்லெண்ணெய் குளியல்

சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். அதுவும் காலையில் 6-7 மணியளவில் சனி ஹோரையில் நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

சனி பரிகார ஸ்தோத்திரம்

பின்வரும் சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கும் போது உச்சரிக்க, சனி பகவானின் அருள் கிடைக்கும்.

“சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றிச் சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!”

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x