Simmam | சிம்மம்

Leo Today 28th November 2020

சிம்மம்

சுப தினங்கள்:  3rd, 8th, 11th, 18th, 24th, 28th and 30th

அசுப தினங்கள்:  11th, 15th, 22nd, 27th and 29th

சிம்ம ராசி அன்பர்களுக்கு இது சாதாரண பலன் அளிக்கும் மாதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சீராக சென்றாலும், குடும்ப உறுப்பினர்களிடம் நல்லிணக்க உறவை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பணி செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் சிறப்பாக செயலாற்றுவதன் மூலம் பணியில் சிறந்த முன்னேற்றம் காண இயலும். பொது விழாக்கள் மற்றும் சமூக விழாக்களில் பங்கு கொள்வதன் மூலம் சமூகத்துடனான உங்கள் தொடர்பு மேம்படும். சிம்ம ராசி அன்பர்களின் குழந்தைகள் தங்கள் துறையில் சிறப்பாக செயலாற்றுவார்கள். அவர்கள் மூலம் உங்களுக்கு மன அமைதி கிட்டும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பருவ கால மாறுபாடு காரணமாக உங்களில் சிலருக்கு சிறிய உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

காதலைப் பொறுத்த வரை இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாதமாக இருக்கும். சிலரின் காதல் உறவுகள் திருமண பந்தமாக மாறும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தகுந்த வரனை தெரிவு செய்ய வேண்டியது அவசியம். உங்களில் சிலருக்கு இந்த மாதம் திருமணம் நடக்கும். சமூகத் தகவல் தொடர்புகள் அதிகரிக்கும். ஆனால் எல்லா விஷயங்களிலும் நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.

இந்த மாதம் நிதிநிலையில் நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். நீங்கள் விரும்பியது போல உங்கள் வங்கியின் உங்கள் சேமிப்பு இருப்பு நிலை உயரும். நீங்கள் வாங்கிய கடனையும் திரும்ப செலுத்த ஆரம்பிப்பீர்கள். உங்களில் சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். பண விஷயங்களில் சரியான வகையில் திட்டமிடுவதன் மூலம் நீங்கள் பொருளாதார வெற்றி காண இயலும்.

உங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை நீங்கள் முறையாக கவனம் செலுத்தி முடிக்க வேண்டியது அவசியம். என்ற போதும் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதில் நீங்கள் சில கால தாமதங்களை சந்திப்பீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆக்கப்பூர்வமாக பணியாற்ற முயலுங்கள். சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிருங்கள். அவர்களுடன் சுமூக உறவை மேற்கொள்ளுங்கள். அலுவலக இரகசியங்களை காப்பதில் கவனமாக இருங்கள்.

இந்த மாதம் ,உங்கள் தொழில் நடவடிக்கைகள், முன்னேற்றப் பாதையில் செல்லும் வகையில் சாதகமாக இருக்கும். அப்பொழுது தான் நீங்கள் சிறந்த பலன்களைக் காண இயலும். கிரகங்களின் அமைவு நிலை காரணமாக, பொறுமை இழக்க வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதனால் உங்கள் வியாபார நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளும் போதுமனதில் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த நேரத்திலும் எல்லா விஷயங்களிலும் பொறுமை காக்க வேண்டும்.

தொழில் நிபுணர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன் தரும் மாதமாக இருக்கும். பணிகள் அதிகம் இருந்தாலும் உடன் பனி புரிபவர்கள் உதவி மூலம் அந்தப் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலும். பணியிடத்தில் சுமுக உறவு மேற்கொள்ள முயலுங்கள். அதன் மூலம் நீங்கள் உங்கள் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ள முடியும்.

சிம்ம ராசி அன்பர்களின் மனதில் தேவையிலாத பதட்டம் ஏற்படும். எனவே எலாவற்றையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயலுங்கள். அப்பொழுது தான் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த பருவ காலத்தில் விளையும் பழங்களை உட்கொள்ளுங்கள். எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கு முறையான ஓய்வும், தூக்கமும் அவசியம்.

சிம்ம ராசி மாணவர்களின் கல்வி சீராகச் செல்லும். ஆசிரியர் நடத்தும் பாடங்களை நீங்கள் ஊன்றி கவனித்துப் படியுங்கள். உங்கள் சக மாணவர்களுடன் கலந்து பழகுங்கள். படிப்பு நேரத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து தேவையானவற்றை மட்டும் பேசுங்கள். உங்கள் தனிப்பட்ட ஒழுக்கத்தில் கவனம் செலுத்துங்கள்

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை. (குறள் எண்: 03)

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

11/18/2020 

புதன்கிழமை

நல்ல நேரம்

9.15-10.15; 4.45-5.45

எமகண்டம்

காலை 7.30-9.00

இராகு காலம் 

மதியம் 12.00-1.30

மேஷம்

நலம்

ரிஷபம்

பெருமை

மிதுனம்

மறதி

கடகம்

நட்பு

சிம்மம்

அமைதி

கன்னி

சாந்தம்

துலாம்

கஷ்டம்

விருச்சிகம்

நன்மை

தனுசு

கோபம்

மகரம்

புகழ்

கும்பம்

சாதனை

மீனம்

இன்பம்