Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

சிம்மம்

சுப தினங்கள்:  1, 2, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 24, 25, 31

அசுப தினங்கள்:  4, 5, 6, 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30

சிம்ம ராசி அன்பர்களின் தோற்றம், ஆளுமை போன்றவற்றில், இந்த மாதம், பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்தக் காலகட்டத்தில், நிதி விஷயங்களிலும், உங்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும். சிலர், சில நல்ல முதலீடுகள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கலாம். வங்கிக் கடன் பெறும் எண்ணம் இருந்தாலோ, உங்களுக்கு உள்ள கடன்களை அடைக்க நினைத்தாலோ, குரு பகவான் உங்களுக்கு உதவி செய்வார் என எதிர்பார்க்கலாம். செல்வத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதையும், அதை ஈட்டுவதற்கும், தக்க வைத்துக் கொள்வதற்கும், கடின முயற்சி செய்ய வேண்டும் என்பதையும், இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும்

சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் தாக்கத்தினால், காதல் உணர்வுகள் அரும்பக்கூடும். உடல் ரீதியான ஈர்ப்பைத் தவிர்த்து, சுயநலமற்ற, ஆன்மீக ரீதியான, தெய்வீகக் காதலை, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆயினும், நீங்களோ அல்லது உங்கள் துணைவரோ, ஒருவருக்கொருவர், ஏதோ கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விடும் வாய்ப்புள்ளது. இது, எதிர்காலத்தில், உங்களுக்கிடையே தவறான புரிதலை ஏற்படுத்தி விடலாம். எனவே, இது போன்ற பேச்சையோ, செயலையோ தவிர்ப்பது அவசியம்.

இந்தக் காலத்தில், உங்களில் சிலரது குடும்ப வாழ்க்கையில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும். சில குடும்பச் செலவுகள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும். இருப்பினும், உங்கள் குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தோர், மற்றும், குறிப்பாக உங்கள் துணைவருக்காக, நீங்கள் விருப்பத்துடன் செலவு செய்வீர்கள். உங்கள் இளைய சகோதர, சகோதரிகள் உங்களிடமிருந்து ஏதாவது நிதி உதவியை எதிர்பார்க்கக்கூடும். எனவே, அவர்களுக்குப் பணம் கடன் கொடுக்கத் தயாராக இருங்கள். அத்துடன் கூட, அவர்கள் நிதிநிலையை சீர்செய்யும் நோக்கில் அவர்களுக்கு சில அறிவுரைகளைக் கொடுப்பதும் நல்லது.

வேலையில் உள்ளவர்களுக்கு, இந்த மாதம், நம்பிக்கையூட்டும் ஒன்றாகக் காணப்படுகிறது. உயரதிகாரிகள் உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கக்கூடும். இது உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களும், நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை அளிக்கக்கூடும். ஆனால் அதிக அகம்பாவம், மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்றவை வேண்டாம். வேலை தொடர்பாக உங்களுக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். இருப்பினும், நீங்கள் அடக்கமாகவும், எளிமையாகவும் இருப்பது அவசியம். இது உங்களுக்கு நீண்டகால நன்மையைத் தரும். சுக்கிர கிரகத்தின் அமைப்பு, உங்களில் சிலருக்காவது, வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்புகளை வழங்கக் கூடும்.

கூட்டுத் தொழில் சாதகம் தராமல் போகலாம். தொழில் ஒப்பந்தங்களும், பயணங்களும் கூட வெற்றி தராமல் போகலாம். பொழுதுபோக்குத் துறை அல்லது கலைத்துறையில் இருந்தால், சுமாரான வெற்றியை எதிர்பார்க்கலாம். தொழில் ஒப்பந்தங்கள் ஏதேனும் செய்து கொள்வதாக இருந்தால், உங்கள் நகரம் அல்லது சொந்த ஊரிலேயே செய்து கொள்வது நல்லது. இது போன்ற நடவடிக்கைகளுக்காக, தொலை தூரங்களுக்குப் பயணம் செய்வதை விட, நீங்கள் இருக்கும் இடத்திலே அவற்றைச் செய்து கொள்வது சாதகமாக அமையும்.

சிம்ம ராசி தொழில் வல்லுநர்கள், இயற்கையாகவே, கம்பீரமாகவும், ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களது கடின உழைப்பிற்கு, இந்த மாதம், உரிய பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம். உயரதிகாரிகள் சிலர், உங்களை, அவர்களுக்குப் போட்டியாளர்களாகக் கருதி, உங்கள் பாதையில் தடங்கல்களை ஏற்படுத்த முயலக்கூடும். செவ்வாய் மற்றும் சூரியனின் அமைப்பின் விளைவாக, ஏறத்தாழ இந்த மாதம் முழுவதுமே, பயணங்களும் சவாலாக அமையக் கூடும். ஆகவே, வெளிநாடு செல்வதற்கான பயண விசா அல்லது பயணச் சீட்டு போன்றவை தாமதம் ஆகலாம்.

இந்தக் காலகட்டத்தில், பெரிய ஆரோக்கியக் குறைபாடுகள் எதுவும் இன்றி, உங்கள் உடல்நிலை நன்றாகவே காணப்படுகிறது. ஆயினும், செவ்வாய் கிரகம் மீன ராசியில் சஞ்சாரம் செய்வதனால், சிறு வலி, காயம், சிராய்ப்பு போன்றவை, சிலருக்கு ஏற்படலாம். எனவே, அபாயகரமான, முரட்டுத்தனமான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல், உடல்நிலையை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. சத்தான உணவை உட்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது போன்றவை, உங்களை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.

மாணவர்களுக்கு இது ஓரளவு சவாலான காலமாக இருக்கக் கூடும். அவர்களது ஆசைகளும், கனவுகளும் அங்கீகரிக்கப்படாதது போலவும், கண்டனத்துக்கு உள்ளாவது போலவும் தோன்றலாம். அவர்களது ஆர்வக் குறைபாடு, அவர்கள் கல்வி முயற்சியை ஓரளவு பாதிக்கலாம். குரு, செவ்வாய் கிரகங்கள் உள்ள நிலை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், படிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். இந்த நேரத்தில், உங்கள் குறிக்கோள்கள் குறித்து, மிகவும் கராராக இல்லாமல், நிலைமையை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பாடங்கள், வீட்டுப்பாடங்கள் போன்றவற்றைத், தவறாமல் அவ்வப்பொழுது முடித்து விடுவதும் நல்லது.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்