கார் மோதி முதியவர் பலி.. சர்ச்சையில் சிக்கிய சிம்புவின் கார்.. அதிர்ச்சி தகவல் !

தமிழ் திரைப்பட உலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் பிறகு வெளியாகி திரையரங்கில் வெற்றி நடைபோட்டது. 

இது சிம்புவிற்கு நல்ல கம்பேக் ஆக அமைந்தது. தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே கார் ஒன்று சென்றபோது, மாற்றுதிறனாளி முதியவர் ஒருவர் தவழ்ந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை கவனிக்காத கார் ஓட்டுநர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது அந்த கார் நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை ஓட்டிவந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து நடைபெற்ற சம்பவத்தின் போது காரில் நடிகர் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்திரன் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.