Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

கொரோனா தடுப்பூசியை பெற 2 பெண்கள் செய்த அதிரவைக்கும் செயல்

அமெரிக்காவில் இரண்டு பெண்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக, மூதாட்டிகளை போல உடையணிந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனினும் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக, அமெரிக்காவில் இரண்டு பெண்கள், மூதாட்டிகளை போல உடையணிந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டி என்ற பகுதியில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது.. அப்போது 33 மற்றும் 44 வயதுடைய பெண்கள் இருவர், வயதான பெண்களை போல உடையணிந்து தடுப்பூசி போட முயன்றுள்ளனர்.

அவர்களிடம் செல்லுபடியாகும் சிடிசி அட்டை, தடுப்பூசி அட்டை ஆகியவை இருந்துள்ளது. அவர்களின் அடையாளங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் சில சிக்கல்கள் இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் உடனடியாக ​​காவல்துறையை அழைத்தனர். அப்போது தான் அவர்கள் போலியாக வேடமிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

எனினும் அந்த பெண்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x