இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் சிம்ரன்?

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் சிம்ரன்?

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சிம்ரன் ஹெட்மயர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரன் கூறியதாவது:-

ஹெட்மயர் இன்று காலை உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இது ஒரு அற்புதமான செய்தி. எனவே, அவரை முடிந்தவரை விரைவில் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம். எப்போது என்று என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் நீங்கள் அவரை களத்தில் காணலாம்

இவ்வாறு அவர் கூறினார்.

ஹெட்மயர் கடைசியாக மே மாதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் முடிந்ததும் நெதர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹெட்மயர் களமிறங்குவார் என வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.