வார்னே உயிரிழப்புக்கு மது, போதை காரணமா..? சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்

பிரபல கிரிக்கெட் வீரர் வார்னே மறைவுக்கு மது போதை காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வார்னே உயிரிழப்புக்கு மது, போதை காரணமா..? சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்

52 வயதான வார்னே, தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இன்று மாலை, மயங்கிய நிலையில் வார்னே படுக்கையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி, சிபிஆப் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அது பலன் அளிக்கவில்லை.

வார்னே கிரிக்கெட் மைதானத்தில் எவ்வளவு சாதனை படைத்துள்ளாரோ, அதே போல் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியேவும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 

வார்னே தனது கிரிக்கெட் காலங்களில் போது தனது உடல் தகுதியை குறித்து கவலைப்பட்டதே இல்லை. கிரிக்கெட் வீரருக்கான உடல் அமைப்பு சுத்தமாக அவரிடம் இருக்காது.

இதனால் பந்துவீசும் போது வார்னே ஓடி எல்லாம் வரமாட்டார். இரண்டு ஸ்டேர் நடந்து கையை சுற்றி பந்துவீசுவார். அவ்வளவு எளிமையான பந்துவீசும் ஆக்சன். கிரிக்கெட் விளையாடும் போதே மது, மாது, போதை வஸ்து என்று சுற்றிய வார்னர், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வார்னர் இறங்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி இருக்க, அவர் ஏன் தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வார்னே அங்கு ஆடையில்லா மசாஜ், மது , மாது என்று சுற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வார்னேவின் காட்ஃபாதரான ராட் மார்ஷ் உயிரிழந்தார். இந்த துக்கத்தில் வார்னே அதிக அளவிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்துவை உட்கொண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.