பாடசாலைகள் ஆரம்பம் - நேரத்தில் மாற்றமில்லை

இன்று முதல் பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பம் - நேரத்தில் மாற்றமில்லை

சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இன்று முதல் பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய சகல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.