பசில், மஹிந்தவுக்கு எதிரான பயணத்தடை நீடிப்பு

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

பசில், மஹிந்தவுக்கு எதிரான பயணத்தடை நீடிப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த  கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அதிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பிரதிவாதிகளான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட தரப்பினர், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.