Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதி அரேபிய இளவரசர் ஒப்புதல் அளித்தார்: அமெரிக்கப் புலனாய்வு அறிக்கை

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman), அந்நாட்டுச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் (Jamal Khashoggi) கொலைக்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்கா முதல்முறையாக, வெளிப்படையாய் சவுதி பட்டத்து இளவரசர்மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

திரு கஷோகியைப் பிடிக்கவோ கொலைசெய்யவோ எடுக்கப்படும் முயற்சிக்குப் பட்டத்து இளவரசர் அனுமதி வழங்கியதாகப் புலனாய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

அவரின் செல்வாக்கின் அடிப்படையில் சுமார் மூவாண்டுக்கு முன்னர் நடந்த அந்தக் கொலைச் சம்பவம், பட்டத்து இளவரசரின் ஒப்புதலின்றி நடந்திருப்பதற்கான சாத்தியம் குறைவு என்றது அறிக்கை.

அதற்கு சவுதி அரேபியா மறுப்புத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை போலியானது என்றும் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் சவுதி அரேபியா கூறியது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தவறானவை என்றும் அது கூறியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x