இந்த 3 ராசிக்கு ஜூலை மாதம் பம்பர் பரிசு காத்திருக்கிறதாம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒரு கிரகம் ராசியை மாற்றும்போது எல்லாம், மனித வாழ்க்கையிலும் பூமியிலும் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது.

இந்த 3 ராசிக்கு ஜூலை மாதம் பம்பர் பரிசு காத்திருக்கிறதாம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒரு கிரகம் ராசியை மாற்றும்போது எல்லாம், மனித வாழ்க்கையிலும் பூமியிலும் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது.

இதனால் சனி பகவான் கர்மாவுக்கு ஏற்றவாறு பலன் கொடுப்பார். தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்.

மீனம்

மீன ராசியினர்களுக்கு சனிபகவான் 11வது வீட்டில் சஞ்சரிப்பார். இவை வருமானம் மற்றும் லாப தரும் இடமாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல வருமானம் உண்டாகும்.

புதிய வருமான வழிகளும் உருவாக்கப்படும். மேலும், வியாபாரத்தில் ஒரு ஒப்பந்தம் முடிவடையும். சனி உங்கள் 12 வது வீட்டின் அதிபதியாகவும் இருக்கிறார். எனவே இந்த நேரத்தில் நீங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.

புதிய வேலை வாய்ப்பும் வரலாம். இந்த நேரத்தில் நீங்கள் பயணங்களின் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் முதலீடுகளுக்கு சரியான நேரமாக இது இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு மகர ராசியில் சனிபகவான் பிற்போக்காககு நகர்வில் நுழைந்த உடனேயே நல்ல பலன்களை கொடுப்பார். சனிபகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம்.

நீங்கள் ஏற்கனவே நல்ல வேலையில் இருந்தால், அதில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க இது சாதகமான நேரம்.

அதே சமயம் பணியிடத்தில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாக உள்ளார். ஜோதிடத்தின் படி, சனி பகவான் மற்றும் சுக்கிரனுக்கு இடையே நட்பு உணர்வு உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை 12 முதல் நல்ல நாட்கள் தொடங்கலாம். ஏனென்றால் சனி கிரகம் உங்கள் ஜாதகத்தில் பெயர்ச்சியாகும் ஸ்தானம் பணம் மற்றும் பேச்சு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். மேலும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை மீண்டும் பெறலாம். இந்த நேரம் வணிகத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும்.

பணத்தை முதலீடு செய்யலாம். இப்போது முதலீடு செய்யும் பணத்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மறுபுறம், பேச்சு தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு உள்ளவர்களுக்கு இந்த நேரம் நன்மை கிடைக்கும்.