சமையலறையில் மறந்தும் கூட இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்...

ஆராய்ச்சி என்ற பெயரில் நல்லதை எல்லாம் கெடுதலாக புரிந்து கொள்ளக் கூடாது. உதாரணத்திற்காக தான் நதி தோன்றக்கூடிய இடத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல், அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Mar 17, 2022 - 06:52
சமையலறையில் மறந்தும் கூட இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்...

நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு நதிமூலம் ரிஷிமூலம் தேடக் கூடாது என்று சொல்லுவார்கள். இந்த நதிமூலம் ரிஷிமூலம் என்றால் என்ன என்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்காது. 

‘ஆராய்ச்சி என்ற பெயரில் நல்லதை எல்லாம் கெடுதலாக புரிந்து கொள்ளக் கூடாது. உதாரணத்திற்காக தான் நதி தோன்றக்கூடிய இடத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல், அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
ரிஷிகளின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல், அவர்கள் சொன்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு பழமொழி நமக்கு சொல்லப்பட்டுள்ளது’.

சமையலறையில் செய்யவே கூடாத தவறு என்ன. 

நம்முடைய வீட்டு சமையல் அறையில் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு சிறிய பாத்திரத்தில் வெள்ளை சாதத்தை போட்டு, தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

காரணம் இரவு நேரத்தில் சமையல் அறையை சுத்தமாக துடைத்தபடி விடக்கூடாது. இரவு நம் வீட்டை தேடி வரும் முன்னோர்களுக்கும், தெய்வங்களுக்கும் உணவாகப்பட்டது இருக்கவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு சாஸ்திரம் முறை நமக்கு சொல்லப்பட்டுள்ளது. சிலபேர் ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட திறந்தபடி சமையலறையில் இரவு நேரத்தில் வைப்பார்கள். இது எல்லாமே நல்ல விஷயங்கள் தான்.

இரவு வைத்த இந்த சாதத்தை மறுநாள் காலை கொஞ்சமாக உப்பு சேர்த்து பசுமாட்டிற்கு அல்லது காக்கை குருவிகளுக்கு இரையாக போடுவோம். இதை நம்மில் நிறைய பேர் வீட்டில் பின்பற்றியும் வருவோம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. 

ஆனால் இவ்வளவு விஷயங்களையும் செய்துவிட்டு, சில பேர் இரவு சமையல் அறை கதவை சாத்தி விடுவார்கள். இரவு நேரத்தில் எப்போதுமே நம் வீட்டு சமையல் அறை கதவு சாத்தி இருக்கக்கூடாது. இரவு நேரத்தில் பூஜை அறைக்கு கூட திரை போடலாம். பூஜை அறை கதவை கூட சார்த்தி வைக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சமையலறைக்கு ஸ்க்ரீன் போடுவதோ அல்லது கதவை மூடி வைப்பதும் இருக்கவே கூடாது.

இரவு நேரத்தில் தெய்வங்கள் நிச்சயமாக நம் வீடு தேடி, நம் சமையலறை தேடி வரும் என்ற நம்பிக்கையில் மூலமாகத்தான் இப்படி ஒரு சம்பிரதாயம் நமக்காக சொல்லப்பட்டுள்ளது. உடனே எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி எழும். நம்முடைய நிலைவாசல் கதவு மூடி தானே வைத்திருக்கின்றோம். அந்த வழியாக தானே இறைவன் உள்ளே வர வேண்டும். பிறகு சமையல் அறை கதவை சாத்தினால் என்ன. திறந்து வைத்தால் என்ன என்று.

நல்ல விஷயங்களுக்கு நதிமூலம் ரிஷிமூலம் ஆராயக் கூடாது என்பதற்காகத்தான் இதையும் முன்கூட்டியே நாம் சொல்லிவிட்டோம். 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்