பிரதமர் பதவி தொடர்பில் சஜித் திடீர் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பில் சஜித் திடீர் அறிவிப்பு

இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு இரண்டு வாரங்களுக்குள் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி  பதவி விலகினால் நாளை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தான் தயாராக உள்ளேன் என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.