தென்னாப்பிரிக்கா அபார வெற்றி.. மீண்டும் சொதப்பிய இந்தியா.. எல்லாமே வீணாக போச்சு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி.. மீண்டும் சொதப்பிய இந்தியா.. எல்லாமே வீணாக போச்சு!

கட்டாக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சர்வதேச போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ருத்துராஜ் கெய்க்வாட் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசிய 21 பந்துகளில் 34ரன்கள் எடுத்தார்.

ரிஷப் பண்ட் ஏமாற்றம்

ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஆனால், 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் 40 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்படட ரிஷப் பண்ட் 5 ரன்களிலும்,ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பேட்டிங் செய்ய வந்த அக்சர் பட்டேல் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே அடித்தார்.

தினேஷ் கார்த்திக் அபாரம்

ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஸ்கோர் தடுமாறிய நிலையில் களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக், 2 சிக்சர்கள, 2 பவுண்டரிகள் விளாசினார். கார்த்திக் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் நோக்கியா 2 விக்கெட்டும், ரபாடா, மகாராஜ், பெர்னல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

புவனேஸ்வர் குமார் அசத்தல்

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. ஹெண்டரிக்ஸ் 4 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 4 ரன்களிலும் , வெண்டர்டுசன் 1 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

கிளாசென் அதிரடி

எனினும் கேப்டன் பெவுமா பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய கிளாசென், இந்திய அணியின் பந்துவீச்சை சிதற அடித்தார், 46 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய கிளாசென் 7பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்தார். டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 20 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 18.2வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW