விபத்தில் இறந்த ரஷ்ய பெண் - ஆதரவற்ற நிலையில் நான்கு வயது மகள்
பிள்ளையை முன்பள்ளியில் விட்டு, விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது ரஷ்ய பெண்ணை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மீது ரயில் மோதியுள்ளது.

காலி உணவட்டுன மஹாரம்ப ரயல் கடவையில் ரயில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்த நிலையில், அவரது நான்கு வயது மகள் நேற்றிரவு வரை முன்பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய பெண் இந்த குழந்தையுடன் உணவட்டுன பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். ரஷ்ய தூதரகத்தின் ஊடாக உறவினர்களை கண்டறிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்பள்ளி ரஷ்ய பெண்ணொருவரால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிள்ளையை முன்பள்ளியில் விட்டு, விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது ரஷ்ய பெண்ணை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மீது ரயில் மோதியுள்ளது.
விபத்து நடந்த ரயில் கடவையில் எச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளதுடன் அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் டயரியா என்ற ரஷ்ய பெண்ணும் கிந்தொட்ட பரணவிதான சரத் நாணயக்கார என்ற ஹபுகல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்தனர்.