ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர்கள் வீசிய பந்துகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெடுகளை பறிகொடுத்தனர். 

இங்கிலாந்து அணி 25.2 ஓவருக்கு 110 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ரோகித் சர்மா 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 76 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்ததால் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படித்துள்ளார். 

சர்வதேச அளவில் ரோகித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் அப்ரிடி 351 சிக்சர், இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் 331 சிக்சர், மூன்றாவது இடத்தில் ஜெய்சூர்யா 270 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.