Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

Johnson & Johnson நிறுவனத்தின் COVID-19 தடுப்பு மருந்தைப் பயன்படுத்த பரிந்துரை

அமெரிக்காவில், Johnson & Johnson நிறுவனத்தின் COVID-19 தடுப்பு மருந்துக்கு அந்நாட்டின் உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஆதரவாய் நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் 22 பேரும் வாக்களித்தனர்.

அது அமெரிக்காவில் மூன்றாவது COVID-19 தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.

Johnson & Johnson நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த எதிர்வரும் நாள்களில் ஒப்புதல் வழங்கப்படலாம்.

அமெரிக்காவில் அடுத்த வாரத்திற்குள் சுமார் 4 மில்லியன் முறை பயன்படுத்தப்படக்கூடிய தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஒருமுறை போடப்படக்கூடிய அந்த Johnson & Johnson தடுப்பு மருந்தை,, சாதாரணமாகக் குளிர்பதனப் பெட்டியிலும் வைத்துப் பயன்படுத்தலாம்.

அது மோசமான நோய்த்தொற்று அறிகுறிகளுக்கு எதிராக 85.4 விழுக்காடு செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும் மிதமான அறிகுறிகளுக்கு எதிராக 66.1 விழுக்காட்டைக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் Pfizer, Moderna நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் 95 விழுக்காட்டுச் செயல்திறனுடன் ஒப்பிடுகையில் அது பின்தங்கியிருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x