Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ரிஷபம்

சுப தினங்கள்:  1, 2, 3, 8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 26, 27, 28, 29, 30

அசுப தினங்கள்:  4, 5, 6, 7, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 31

ரிஷப ராசி அன்பர்கள், இந்த மாதம், குறிப்பாக காதல், வேலை, நிதி போன்றவற்றில், முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். டிசம்பர் மாத மத்தியில் சூரியன் அமைந்திருக்கும் நிலை, உங்கள் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஊழ்வினை காரணமாக, ஏதேனும் விரும்பத்தகாத, பாதகமான விளைவுகள் திடீரென ஏற்பட்டாலும், அவற்றைக் கூட, இந்த மாதத்திலோ, வரும் மாதங்களிலோ, நீங்கள் சரி செய்து விடலாம். ‘இந்தக் காலகட்டத்தில், எதையும் சரி செய்து விடலாம்’ என்று கூட, உங்களில் சிலர் நினைக்கக் கூடும்! பொதுவாக, இந்த நேரத்தில், உங்களுக்குள் இருக்கும் பலம், திறமை போன்றவற்றை, உங்களில் பலரால் நன்கு உணர முடியும்.

சுக்கிர கிரகத்தின் சாதகமான தாக்கம் காரணமாக, காதல் போன்ற இனிய உணர்வுகள் மிகவும் மேம்பட்டிருக்கும். உங்கள் தீவிர உணர்வுகள், நடவடிக்கைகள், மனப்பான்மை இவற்றின் மூலம், நீங்கள் உங்கள் உறவுகளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். துணை அல்லது துணைவரைக் கவருவதற்காக, சிலர், அதிக முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடும். இந்த மாதத்தின் முதல் பாதியில், உங்களது 4 ஆம் வீட்டின் அதிபதியான சூரியன், 7 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால், உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது துணைவர் முக்கியத்துவம் பெறக்கூடும். அவருடன் உங்களுக்கு உள்ள புரிந்துணர்வு வலுப்பெறக்கூடும்.

சந்திரனின் அமைப்பு, உங்கள் பண விஷயத்தில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் முதலீடுகள் நன்றாக வளரும் வாய்ப்புள்ளது. இருப்பினும், பெரிய முதலீடுகள் விஷயத்தில், நிதானமாக, எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. டிசம்பர் 11 வரை துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரன், பின்னர், உங்கள் 7 ஆம் வீடான விருச்சிகத்திற்கு நகருகிறார். இதன் காரணமாக, உங்கள் நிதிநிலை மேலும் முன்னேற்றமடையும் வாய்ப்புள்ளது.

பணியில் இருப்பவர்களுக்கு, இது நல்ல காலம் எனலாம். நீங்கள் செய்யும் வேலைக்காக, உயரதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடும். இதனால் உங்களுக்கு, இன்னும் சிறப்பாகச் செயலாற்றும் உத்வேகம் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களும், நல்ல பலன் தரக்கூடும். வேலை, தொழில் போன்றவற்றைக் குறிக்கும் சனி பகவான், இந்த மாதம், விதியைக் குறிக்கும் வீட்டில், வரங்கள் அருளும் குரு பகவானுடன் இணைந்து இருக்கிறார். இது, வேலையில் உங்களுக்குப் பெரும் சிறப்புகளை அளிக்கக் கூடும்.

தொழிலுக்கு, குறிப்பாக, கூட்டுத் தொழிலுக்கு, இது லாபகரமான காலம் எனலாம். பலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் போன்றவர்களைக் கண்டறிவதற்காகவும் நீங்கள் பயணங்கள் மேற்கொள்வது, வெற்றி தரக்கூடும். டிசம்பர் மாத இறுதி வரை, செவ்வாய், மீன ராசியில் இருப்பதால், இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில், கூட்டுத் தொழில் மூலம், நீங்கள், வளர்ச்சியையும், ஆதாயங்களையும் எதிர்பார்க்கலாம்.

ரிஷப ராசி தொழில் வல்லுநர்கள், குறிப்பாக, படைப்புத் துறையில் உள்ளவர்கள், அவர்களது பணியில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில், உங்கள் உயரதிகாரிகளும், சக ஊழியர்களும் கூட, உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். லாபத்தின் அதிபதியான குரு பகவான், அலுவலக சூழ்நிலை, உயரதிகாரிகள் போன்றவர்கள் மூலம், நீங்கள் திடீர் லாபம் பெற உதவி செய்யக்கூடும். உங்களில் சிலர், பணித்துறையில், சில எதிர்பாராத நன்மைகளையும் எதிர்பார்க்கலாம்.

குறிப்பிடத்தக்க ஆரோக்கியக் குறைபாடுகள் எதுவும் இன்றி, உங்கள் உடல்நிலை நன்றாகவே காணப்படுகிறது. ஆனால், எந்தக் காரணம் கொண்டும், அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். உடலுக்கு ஏற்ற உணவுகள் உட்கொள்வதும், யோகா, உடற்பயிற்சி செய்வதும், நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும். ஆனால், மாதத்தின் முதல் வாரத்தில் சுக்கிரன் துலா ராசியில் இருப்பதனால், சிலருக்கு, இனப்பெருக்க அல்லது பிறப்பு உறுப்புகளில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, உடல் இன்பம் குறித்த செயல்களில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு இது, சவாலான காலகட்டமாக இருக்கக்கூடும். எதிர்நீச்சல் போடும் உணர்வு அவர்களுக்கு ஏற்படக்கூடும். எனவே, சாதாரண பலன்களைப் பெறுவதற்குக் கூட, நீங்கள் இரட்டிப்பு முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கலாம். புதன், சனி இருவரும், உங்கள் கல்வி முயற்சிகளுக்குக் பொறுப்பேற்கும் கிரகங்கள் ஆவர். மாதத்தின் முதல் பாதியில், புதன், விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். இது, பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். ஆனால், மாதத்தின் பிற்பாதியில் புதன், தனுசு ராசியில் இருப்பது, அவர்களுக்கு ஓரளவு சவாலாக அமையக் கூடும். எனினும், உயர் கல்விக்கு உரிய கிரகமான சனி, குருவுடன் இணைந்திருக்கிறார். எனவே, பல குழப்பங்களுக்கு இடையிலும், உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x