Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மிதுனம் 

சுப தினங்கள்:  1, 2, 3, 4, 5 8, 9, 10, 11, 12, 15, 16, 19, 20 21, 22, 23, 24, 29, 30, 31
அசுப தினங்கள்:   6, 7, 13, 14, 16, 17, 18, 26, 27, 28

மிதுன ராசி அன்பர்கள், அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இதற்குக் காரணம், செவ்வாய் கிரகமும், சூரிய, சந்திர கிரகணங்களும் எனலாம். இவை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணித்துறையிலும் நீடித்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இந்த நேரத்தில், உங்கள் காதல் விவகாரங்களும், உறவுகளும் மிகுந்த சிறப்பு பெறும் எனலாம். ஆனால் உங்கள் நண்பர்கள், அல்லது தொழில் கூட்டாளிகள், அல்லது தொடர்பு வட்டத்தில் உள்ளவர்கள் போன்றவர்களுடன் சூடான விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். ஏனெனில், இவை சண்டைகளுக்கும், தவறான புரிந்துணர்வுகளுக்கும் வழிவகுத்து விடக் கூடும்.

மிதுன ராசி அன்பர்கள், அவர்கள் வாழ்க்கையின் பல அம்சங்களிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இதற்குக் காரணம், செவ்வாய் கிரகமும், சூரிய, சந்திர கிரகணங்களும் எனலாம். இவை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணித்துறையிலும் நீடித்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இந்த நேரத்தில், உங்கள் காதல் விவகாரங்களும், உறவுகளும் மிகுந்த சிறப்பு பெறும் எனலாம். ஆனால் உங்கள் நண்பர்கள், அல்லது தொழில் கூட்டாளிகள், அல்லது தொடர்பு வட்டத்தில் உள்ளவர்கள் போன்றவர்களுடன் சூடான விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். ஏனெனில், இவை சண்டைகளுக்கும், தவறான புரிந்துணர்வுகளுக்கும் வழிவகுத்து விடக் கூடும்.

சந்திர கிரகணத்தின் காரணமாக பண விஷயத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் சந்திர கிரகணத்திற்குப் பிறகு நீங்கள் செல்வம் ஈட்டுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனினும், பணம் தொடர்பாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு, அவர்கள் வாழ்க்கைத் துணைவர் அல்லது அவரது பெற்றோர் மூலம், புதையல், அல்லது சில மறைமுக செல்வம் போன்றவை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த விஷயத்தில், உணர்ச்சி வசப்படாமலும், பேராசைப்படாமலும், அமைதியாகவும், ஜாக்கிரதையாகவும் நடந்து கொள்வது அவசியம்.

பணியில் இருப்பவர்கள், சில சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். புதிதாக எந்த வேலையையோ, திட்டத்தையோ ஏற்றுக் கொள்ளும் முன், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில், நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பேச்சுத் திறன், உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் போன்றவர்களிடமிருந்து, உங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தரக் கூடும். உங்கள் ஜாதகத்தில் வேலையைக் குறிக்கும் கிரகமான குரு, உத்யோகத்திற்கு அதிபதியான சனி கிரகத்துடன் இணைந்திருக்கிறார். இது, பணியில் உங்கள் சிந்தனையை வளப்படுத்தி, உங்களில் சிலருக்கு, உயர் பதவி அல்லது பொறுப்பில் ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடும்.

எதிர்பாராத விதங்களிலோ அல்லது மறைமுக இடங்களிலிருந்தோ கூட, தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். இப்பொழுது, கூட்டு வியாபாரம், உங்களுக்குச் சாதகமான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், தொழில் கூட்டாளிகளின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகலாம். இதனால் பிற்காலத்தில் உங்களுக்குப் பிரச்சனைகள் எழலாம். எனவே, தொழிலில் இறங்குவதற்கு முன்னர், கூட்டாளிகள் குறித்து நன்கு விசாரித்துத் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் இலக்குகளையும், உங்களால் எளிதாக அடைய முடியும்.

மிதுன ராசி தொழில் வல்லுநர்கள், சாதகமான நேரத்தை எதிர்பார்க்கலாம் என்றாலும், அவர்களால் வேலையில், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க இயலாமல் போகலாம். குறிப்பாக, புத்தகம் போன்றவற்றின் வெளியீட்டாளர்கள், கணக்கு, வழக்குத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இது பொருந்தும். பல பணிகளை உங்களால் உரிய நேரத்தில் செய்து முடிக்க இயலாமல் போகலாம். கவனிக்க வேண்டிய கோப்புகள் உங்களிடம் குவிந்து விடலாம். எனவே, உரிய நேரத்தில் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். முறையான அணுகுமுறையை மேற்கொண்டு, நல்ல செயல்திட்டத்தை பின்பற்றி, உங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இது, உயரதிகாரிகளின் மரியாதையையும், பாராட்டையும் உங்களுக்குப் பெற்றுத் தரக் கூடும்.உங்கள் சார்பில் அவர்கள் அதனை செய்து முடிப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மூலம்சிறந்த பலன்களைக் காண்பீர்கள்.

உங்கள் உடல்நிலையில் எந்தப் பெரிய அளவிலான பாதிப்பும் காணப்படவில்லை. எனினும், மன அழுத்தம், மன வேதனை காரணமாக, சிலருக்கு ஆரோக்கியம் குறித்த கவலைகள் ஏற்படலாம். செவ்வாய் கிரகம் மீன ராசியில் இருப்பது, உங்கள் பணிக்கு உந்து சக்தியை அளிக்கும் என்றாலும், அது உங்களுக்கு உடல்வலி, தலைவலி, பிற தொல்லைகள் போன்றவற்றையும் தரலாம். எனவே, வேலை தொடர்பாக, உங்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படக்கூடும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். யோகா, தியானம் செய்வதும், சாத்விக உணவு உட்கொள்வதும், இந்த விஷயத்தில் உங்களுக்குத் துணை புரியும். முடிந்தால் மசாஜ், மன அழுத்தத்துக்கான சிகிச்சைகள் போன்றவற்றையும் நீங்கள் மேற்கொள்ளலாம். இவை மனதை இலகுவாக்கி, அமைதிப்படுத்த உதவும்.

மாணவர்களுக்கு இது மன அழுத்தம் தரும் காலமாக இருக்கக்கூடும். நல்ல பலன்களைப் பெற, அதிக கவனம் செலுத்தி, கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அயல்நாட்டுக் கல்வி குறித்த திட்டங்கள் தாமதமாகலாம். உங்களது, மேற்படிப்பைக் குறிக்கும் சனி கிரகம், உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டில் இருப்பது என்பது, மிக நல்ல பலன்களைத் தராமல் போகலாம். ஆனால், இதே வீட்டில் குரு கிரகமும் இருப்பது, உங்களை கடுமையாக உழைக்கவும், எதிர்காலத்திற்கு திட்டமிடவும் வைக்கும். இதன் காரணமாக, வரும் மாதங்களில், உங்களுக்குப் பல நன்மைகள் விளையத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x