Aries Today 28th November 2020

மேஷம்

சுப தினங்கள்:  1st, 3rd, 6th, 10th 13th, 18th, 20th 27th, 29th and 30th

அசுப தினங்கள்:  8th, 9th, 17th, 22nd, 25th and 28th

மேஷ ராசி அன்பர்களின் மனதில் பல புதிய எண்ணங்கள் உதயமாகும் மாதமாக இந்த மாதம் இருக்கும். பிறருடனான உங்கள் உறவு சுமூகமாக இருக்கும். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இந்த மாதம் நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பணியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இந்த மாதம் நீங்கள் மிகவும் கடுமையாக உழைப்பீர்கள். உங்கள் பணிகளை விரைவாகவும் முடிப்பீர்கள். உங்களில் சிலர் பணி நிமித்தமாக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களில் சிலர் நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய சொத்துக்களை வாங்குவீர்கள். உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் செயல்கள் யாவும் பிறரை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். உங்களுடன் பழகுபவர்கள் தங்களின் சொந்த வாழ்விற்கான ஆலோசனைகளை உங்களிடம் கேட்டுப் பெறுவார்கள். சிறிய அளவிலான உடல் உபாதைகள் என்றாலும் உடனே கவனம் செலுத்தி சரி செய்து கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைச் சிறந்த முறையில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உங்களுக்கு பிரியமானவரிடம் உங்கள் காதலை தாமதம் ஏதும் இன்றி வெளிப்படுத்த இது மிகவும் ஏதுவான மாதம் ஆகும். நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் திருமண வாழ்வை பெற்றோர் மற்றும் மூத்தவர்களின் ஆதரவுடன் அமைத்துக் கொள்ளவும் இந்த மாதம் உகந்ததாக இருக்கும். உங்களில் சிலருக்கு திடீரென்று வாழ்க்கைத்துணை அமைய வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வீர்கள்

இந்த மாதம் உங்கள் நிதிநிலை, உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் பொருளாதாரத் தேவைகளை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களில் சிலர் எதிர்கால நலன் கருதி புதிய முதலீடுகளையும் மேற்கொள்வீர்கள். உறவினர்களின் வேண்டுகோள் அல்லது தேவை கருதி அவர்களுக்கு பண உதவி செய்வீர்கள். நண்பர்களிடம் இருந்து வர வேண்டிய தொகையை வசூலிப்பீர்கள். உங்களில் சிலர் ஆன்மீக காரியங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.

மேஷ ராசி அன்பர்களுக்கு பணியைப் பொறுத்த வரையில் இந்த மாதம் அதிக அளவில் பணிகள் காணப்படும். இதனால் உங்கள் முன்னேற்றம் கால தாமதம் ஆகும். ஆனால் சில சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்கு உதவியாக இருக்கும். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் உங்கள் பணியில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த மாதம் கிரகங்களின் சில பாதகமான நிலைகள் உங்கள் வியாபார வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உள்ளது. மேலும் வாய்ப்புகளை உங்கள் வசப்படுத்திக் கொள்வதிலும் நீங்கள் சில தாமதங்களை சந்திப்பீர்கள். இதனால் உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும்.

இந்த மாதம் நீங்கள் உங்கள் தொழிலில் அனைவருடனும் நல்ல சுமுகமான உறவை பராமரிப்பீர்கள். உங்கள் பணிகளுக்கான பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பண வரவும் அதிகம் இருக்கும். உங்களில் சிலருடன் உங்கள் மேலதிகாரிகள் குறிப்பிட்ட பணிகள் குறித்து இரகசிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் திட்டமிட்டுப் பணிகளை ஆற்றுவீர்கள். உங்கள் புதிய உத்திகள் மூலம் நீங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள.

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் உடல் வலுவை அதிகரித்துக் கொள்ள, இந்தப் பருவத்திற்கேற்ற பழங்களை உண்ணுங்கள்.

கல்வியைப் பொறுத்தவரை மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கும். நீங்கள் விரும்பும் வகையில் கல்வியில் வெற்றி காண்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுக்கள் உங்கள் மனதிற்கு திருப்தி அளிக்கும். உங்களில் சிலர் உங்கள் சக மாணவர்களின் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை. (குறள் எண்: 03)

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

11/18/2020 

புதன்கிழமை

நல்ல நேரம்

9.15-10.15; 4.45-5.45

எமகண்டம்

காலை 7.30-9.00

இராகு காலம் 

மதியம் 12.00-1.30

மேஷம்

நலம்

ரிஷபம்

பெருமை

மிதுனம்

மறதி

கடகம்

நட்பு

சிம்மம்

அமைதி

கன்னி

சாந்தம்

துலாம்

கஷ்டம்

விருச்சிகம்

நன்மை

தனுசு

கோபம்

மகரம்

புகழ்

கும்பம்

சாதனை

மீனம்

இன்பம்