Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ரஜினி ஏதோ முக்கிய அறிவிப்பு வெளியிட போகிறாராமே… திடீர் பரபரப்பு!

“என்னாது, மறுபடியும் ரஜினியா”.. என்ற கேள்வி மொத்த சோஷியல் மீடியா முழுவதும் தீயாய் பரவி வருகிறது.. ஏதோ முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறாராம்.

ரஜினிகாந்த்துக்கு உடம்பு சரியில்லை.. அதனால் அரசியலுக்கு வர போவதில்லை என்று சொல்லி ஒதுங்கி கொண்டார்.. இதனால் ரசிகர்களோ அதிர்ச்சி அடைந்தனர்..

ஆனால், ரஜினியை வைத்து மிச்ச எதிர்காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று நம்பி கொண்டிருந்தவர்கள் தலையில் இடியே விழுந்துவிட்டது.

அரசியலுக்கு வரவில்லை என்றதுமே பலர் முந்தி கொண்டு வந்து ரஜினிக்கு வாழ்த்து சொன்னார்கள். உடல்நிலையை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி பாச மழை பொழிந்தார்கள்.

அப்படியே தங்களுக்கு மட்டும் வாய்ஸ் தந்துவிடும்படி கொக்கி போட்டார்கள். இதில் கம்யூனிஸ்ட் காம்ரேடுகளும் ரஜினி ஆதரவை கேட்டது வியப்பின் உச்சம்தான்.

இதனால் இந்த முறை தேர்தலில் ரஜினி யாருக்கு வாய்ஸ் தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே இருந்தது. ஆனால், அதையும் ஒத்த அறிக்கை வெளியிட்டு பொசுக்கென நொறுக்கிவிட்டது ரஜினி தரப்பு.

யாருக்கும் வாய்ஸ் இல்லை என்று சொல்லியாகிவிட்டது. இந்த விஷயத்திலும் பெருத்த அதிர்ச்சி கட்சிகளுக்கு ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. வரும் 26-ம் திகதி மன்றத்து நிர்வாகிகளை சந்திக்க போகிறாராம். அத்துடன் செய்தியாளர்களையும் சந்திக்க போகிறாராம்.

இதுதான் அரசியல் களத்தில் குழப்பம் கலந்த விறுவிறுப்பை கூட்டி வருகிறது. தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், ரஜினி எதற்காக செய்தியாளர்களை சந்திக்க போகிறார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x