இலங்கை

12வது முறையாக பட்டம் வென்று நடால் சாதனை!

ரஃபேல் நடால் 12வது முறையாக ஃபிரெஞ்ச் ஓப்பன் படத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, ஆண்கள், பெண்கள் என அனைத்து பிரிவினர் ஆட்டத்திலும் ஒரே பட்டத்தை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் தெய்மை 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். மொத்தமாக 20 பெரிய பட்டங்களை வென்ற ஃபெடரரை விட இரண்டு பட்டங்கள் குறைவாக நடால் உள்ளார்.

தொகுப்பளினி தாபாவுக்கு திடீர் திருமணம்.! புகைப்படம் உள்ளே

ஜோகோவிச்சைவிட 3 பட்டங்கள் அதிகமாக உள்ளார். மொத்தமாக பங்கேற்ற 95 ஃபிரெஞ்ச் ஓப்பன் ஆட்டங்களில் 93 வெற்றிகளை பெற்று கிங் ஆஃப் க்ளே என்ன நிரூபித்துள்ளார்.

இது நடாலின் 82வது பட்டம் மற்றும் 950ஆவது போட்டி வெற்றியாகும்.

53 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை முதலில் 3-2 என தெய்ம் முன்னிலை வகித்தார். பின்னர் அந்த செட்டை 6-3 என வெற்றிப்பெற்ற நடால், இரண்டாவது செட்டை போராடி இழந்தார். அடுத்த இரண்டு செட்களை 6-1,6-1 என்று இழந்தார் தெய்ம்.

தளபதியின் தரமான அப்டேட்டால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

1995ல் ஆஸ்திரியா சார்பில் தாமஸ் மிய்யுலர் பட்டம் வென்றார். அதன்பின் பட்டம் வென்றவர் தெய்ம் தான். கடைசி இரண்டு செட்களில் 3-0 என அபாரமாக ஆரம்பித்தார் நடால்.

இதன் மூலம் தனது 12வது ஃப்ரெஞ்ச் ஒப்பன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

பிரெஞ்ச் ஓபன் – காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close