Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

புலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்!

புலிக்குத்தி பாண்டி விமர்சனம்: எப்பொழுதும் சண்டை போடுவதும் பின்னர் பொலிஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று அலைவதுமாக இருக்கும் ஹீரோ.

ஆனால், அவர் மிகவும் நல்லவர், கொடைவள்ளல் தன்மை கொண்டவர், நூறு பேரை வீழ்த்தும் சூரர், பாசம் காட்டுவதில் திக்குமுக்காட வைப்பவர்… இவையெல்லாம்தான் இயக்குநர் முத்தையா படத்தின் ஹீரோ வடிவமைப்பாக இருக்கும்.

ஹீரோவை திருத்தி, குடும்ப வாழ்க்கையை வாழவைக்கும் மனைவியாக ஹீரோயின். இதுதான் இயக்குநர் முத்தையா எடுக்கும் படங்களின் டெம்பிளேட்.

எப்படி இருந்த லட்சுமி இப்படி ஆகிட்டாரே…

‘புலிக்குத்தி பாண்டி’யும் மாற்றமேயில்லாமல் அப்படியேயான கதைதான். பொங்கல் பண்டிகையையொட்டி ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’, ‘பூமி’ வரிசையில் பொங்கல் வெளியீடாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகியது ‘புலிக்குத்தி பாண்டி’.

விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், லட்சுமி மேனன் கதாநாயகியாகவும் நடிக்க வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ், சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘கொம்பன்’, ‘குட்டிப்புலி’, ‘மருது’ படங்களில் சசிக்குமார், கார்த்தி, விஷால் கதாபாத்திரங்களைப் போலதான் ‘புலிக்குத்தி பாண்டி’யில் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரமும்.

உடல் எடை குறைத்த லட்சுமி மேனன்… இதோ புகைப்படங்கள்

அதேபோல், அந்த ஹீரோவின் நல்ல குணங்களை பார்த்து மெய்சிலிர்த்து ‘திருமணம் செய்தால் இவனைத்தான் செய்து கொள்வேன்’ என ஒற்றைக்காலில் நிற்கும் ஹீரோயினாக லட்சுமி மேனன். வழக்கமாக அவர் படங்களில் இருக்கும் வில்லன் கதாபாத்திரங்களாக வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ்.

‘கொம்பன்’ படத்தில் வரும் பல காட்சிகள் இந்தப் படத்திலும் அப்படியே இருக்கிறது. அப்புறம், ‘குட்டிப்புலி’ படத்திலும் வரும் காட்சிகளையும் பல இடங்கள் நினைவுபடுத்திவிட்டு செல்கிறது.

‘மருது’ படத்தையும் கூட சில இடங்களில் நினைவூட்டுகிறது. ஹீரோயின் சொன்னவுடன் அப்படியே ஹீரோ விக்ரம் பிரபு முழுசா திருந்தி அநியாயத்திற்கு நல்ல குடும்பஸ்தனாக மாறிவிடுகிறார் ‘கொம்பன்’ படத்தைப் போல. ஒரு வில்லனை கொடூரமாக வடிவமைக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் ஆரம்பமே கொடூர வில்லன்களாக வரும் வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் கேரக்டர்களின் ப்ளாஷ் பேக்தான். அவ்வளவு வன்முறையாக அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வன்முறையில் இருந்து பாசத்தை நோக்கி படம் நகரும்போது நன்றாகவே இருக்கிறது. உண்மையில் இயக்குநர் முத்தையாவுக்கு நன்றாகவே உணர்வுபூர்வ படம் எடுக்க தெரிகிறது. அதில் சந்தேகமே இல்லை. அவர் உணர்வுபூர்வமாக காட்சிகளை அசால்டாக எடுத்துவிடுகிறார்.

பின்னணி இசை, திரைக்கதை அமைக்கும் விதம் பல விஷயங்கள் அவர் படங்களில் நேர்த்தியாக இருக்கும். கேமராவையும் கிராமப் பின்னணியில் யதார்த்தமாக பயன்படுத்திருக்கிறார்.

வட்டிக் கொடுமைப் பற்றியும், விவசாயிகள் படும் கஷ்டம் பற்றியும் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவை உண்மையில் உணர்வுபூர்வமானவை. பாடல்களும் அவை காட்சி அமைக்கும் விதமும் நன்றாகவே இருக்கிறது.

விக்ரம் பிரபு திருமணத்திற்கு பிறகு நடந்துகொள்ளும் விதமும், அது படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கிறது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனம் உள்ளிட்ட எல்லோருமே தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

ஆனால், ஒட்டுமொத்தமாக வன்முறைதான் நம்முடைய மனதில் நிலைத்து நிற்கிறது. இதில் கதாநாயகியை அருவா, கத்தி பிடிக்க வைத்து ருத்ர தாண்டவம் ஆடவைப்பதெல்லாம் ‘வேற லெவல்’. ஆனால், தமிழக கிராமங்கள் இப்படிதான் வன்முறைக் களமாக இருக்கிறேதோ என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

கடைசியில் இது உண்மை சம்பவம் என்றும் டைட்டில் வருகிறது. உண்மைச் சம்பவமாகவே இருந்தாலும் படம் முழுக்க ஏன் இந்த அளவுக்கு வன்முறை கையாளப்படுகிறது என்பது தொக்கி நிற்கும் முழுமுதற் கேள்வி.

பகையும் பயமும் தெறிக்கும் விதமாக திரைக்கதையில், வன்முறையை இந்த அளவிற்கு கட்டவிழ்க்கப்படுவது ஒருவித திணிப்பு நடவடிக்கையாக உணர முடிகிறது.

சின்னத்திரையில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படத்தில் வன்முறை உச்சகட்டத்தில் இருப்பது, படைப்பாளிகளின் பொறுப்புணர்வு குறித்த கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.

இந்தப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக கதாநாயகி லட்சுமி மேனனை வன்முறையில் இறக்கியுள்ள விதம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ள லட்சுமி மேனனின் சண்டைக் காட்சிகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் இயக்குனர் முத்தையா நடிகை லட்சுமி மேனனை ருத்ர தாண்டவம் ஆட வைத்திருக்கிறார் என்றே ரசிகர்களால் கூறப்படுகிறது.

அதாவது பெண் கதாபாத்திரத்தின் கைகளில் அருவா விளையாடுவது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வழக்கமான கதைக்களத்தில் இருந்து சற்று மாறுதலாக கதாநாயகியை இறுதியில் சண்டை போட வைத்திருக்கிறார் இயக்குனர்.

முத்தையா போன்ற இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் மிகவும் யதார்த்தமான,மண்வாசனைமிக்க படங்களாகத்தான் இருக்கும். இது வழக்கத்திற்கு மாறாக தன்னுடைய படங்களிலிருந்து இந்தப் படத்திற்கு இயக்குனர் சற்று புதுமையைப் புகுத்தி உள்ளார் என்று சொல்ல வேண்டும்.

புலிக்குத்தி பாண்டி படத்தில் லட்சுமி மேனன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே கூறலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர்,ஈஸ்வரன், பூமி வரிசையில் பொங்கல் வெளியீடாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகியது புலிக்குத்தி பாண்டி திரைப்படம்.

விக்ரம் பிரபு கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் கதாநாயகியாகவும் நடிக்க வேல.ராமமூர்த்தி,ஆர்கே சுரேஷ் ,சமுத்திரக்கனி,நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் .

சண்டை போட்டுவிட்டு நீதிமன்றம் ,பொலிஸ் நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் ஹீரோவை திருத்தி குடும்ப வாழ்க்கையை வாழவைக்கும் மனைவியாக ஹீரோயின் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

குட்டிப்புலி,மருது,கொம்பன் படங்களில் ஹீராக்களின் கதாபாத்திரங்களைப் போல தான் புலிக்குத்தி பாண்டி, விக்ரம் பிரபுவின் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தில் கொம்பன் படம் மற்றும் குட்டிப்புலி படத்தில் வருவது போல பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சினிமா ரசிகர்களால் கூறப்படுகிறது.

படத்தில் வில்லனான ஆர்.கே. சுரேஷ் கதாபாத்திரத்தை கொடூரமான முறையில் இயக்குனர் உருவாக்கியுள்ளார். ஆகவே புலிக்குத்தி பாண்டி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

உணர்வுபூர்வமான படங்களை கொடுக்க வல்லவர் தான் இயக்குனர் முத்தையா. படத்திற்கு இசை,திரைக்கதை பின்னணி என நேர்த்தியான படைப்பாக இது காணப்படுகிறது .வன்முறையிலிருந்து பாசத்தை நோக்கி நகரும் படமாக இருப்பதை காண முடிகிறது.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக கதாநாயகியை அருவாக் கத்தியை பிடிக்க வைத்து சண்டை போட வைப்பது எல்லாம் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நேரடியாகவே சின்னத்திரையில் வெளியிடப்பட்ட புலிக்குத்தி பாண்டி பொதுவாக நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது .

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x