போராட்டத் தளத்தை இடமாற்ற வேண்டும் - பிரசன்ன

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

போராட்டத் தளத்தை இடமாற்ற வேண்டும் - பிரசன்ன

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளதாக  ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள், குற்றவாளிகள் மற்றும் ஏனையவர்கள் இன்னும் அங்கு தங்கியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்றுவரும் அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இடத்தை மாற்றலாம் என்றும் அவர் யோசனை கூறினார்.