ரணில்

இந்தியத் தலைவர்களுடன் பிரதமர் இன்று முக்கிய பேச்சு

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக – முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு இன்று பிற்பகல் ஹைதராபாத் ஹவுசில் இடம்பெறும்.

இதன்போது, இரண்டு நாடுகளின் பிரதமர்களும், வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டங்களின் நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்றும், நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் தமிழ்ப் பகுதிக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழர் விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கையில் சீனாவின் பொருளாதாரத் தலையீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில், இந்திய –சிறிலங்கா உறவுகளின் முழுவரம்பு குறித்து கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

ஜமால் கஷோகி கொல்லப்பட்டதை சவூதி அரேபியா ஏற்பு

Next Article

சுரங்கத்தில் பாம்புகளுடன் போராடி உயிர்பிழைத்த 62 வயது நபர்

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
0
Share